ஏன் நான் சில வேளைகளில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றேன்?
பருவமடைதலைக் கட்டுப்படுத்தும் ஹோர்மோன்கள் உணர்வுகளையும் அதன் வெளிப்பாடுகளான உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் பாலுறவு பற்றி சிந்திப்பீர்கள், பாலியல் தேவைகளை உணர்வீர்கள். இதனால் பெண் பிள்ளைகள் மீதும், ஆண் பிள்ளைகள் மீதும் அல்லது சிலவேளைகளில் இருவர் மீதும் ஈர்க்கப்படுவீர்கள். நீங்கள் சுய இன்பம் பெற்றுவிட்டு பின்னர் அது பற்றி குற்ற உணர்வு கொள்வீர்கள். இவை அனைத்தும் சாதாரண விடயங்களாகும்.
நான் ஏன் அதிகம் உணர்ச்சி வசப்படுகின்றேன்?
தீர்;மானம் எடுக்கின்ற, விடயங்களை ஒழுங்குப்படுத்துகின்ற, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற எதிர்காலத்தினைத் திட்டமிடுகின்ற தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் பகுதி இளம்பருவத்தில் முதிர்ச்சியடைவதில் பல்வேறு மட்டங்களைக் கொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மூளையின் இந்த தொழிற்பாடு இருபது வயது பூர்த்தியாகும் போதுதான் முழுமைப் பெறுகின்றது. இதனால் இளம்பருவத்தினர் ‘முதலில் எதையாவது அவசரப்பட்டு செய்துவிட்டு பின்பு அது பற்றி வருந்துபவர்களாகவும்’ அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் உள்ளனர்.
காதல் வசப்படுதல் என்றால் என்ன?
ஒருவர் மீது ஆழ்ந்த விருப்பம் ஏற்படுவதனை இவ்வாறு குறிப்பிட முடியும். மூளையில் உள்ள இரசாயண மாற்றங்கள் நீங்கள் தனித்திருக்கும் போதும் அல்லது காதலருடன் இருக்கும் போதும் உணர்ச்சிகளைத் தீவிரப்படுத்தி களிப்படைதல், பேரார்வம் கொள்ளல் மற்றும் எழுச்சியை ஏற்படுத்துகின்றது.
காதல் உறவு (relationship) என்றால் என்ன?
இரு வேறுப்பட்ட பாலினர் அல்லது சமப் பாலினருக்கு இடையிலான காதல் உறவே இவ்வாறு அழைக்கப்படுகின்றது. சில காதல் உறவுகள் நீண்ட காலம் நிலைத்திருந்து விவாகம் வரை செல்கின்றது. மற்றும் சில காதல் உறவுகள் சிற்சில காரணங்களினால் இடைநடுவில் முடிவை எதிர்கொள்கின்றன.
காதல் உறவில் உள்ள தடைகளை எப்படி நீங்கள் எதிர்கொள்வீர்கள்? (பொறாமை, ஆணவம், சந்தேகம், ஜாதகம், மதம், சாதி மற்றும் தொழில்)
உறுதியானதும் நம்பிக்கை மிகுந்ததுமான காதல் உறவினைக் கட்டியெழுப்புதலினூடாக இவ்வாறான விடயங்கள் சிலவற்றிலிருந்து மீண்டு வர முடியும். அதேவேளை முழுமையான நம்பிக்கை என்ற விடயம் மட்;டும் சில பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர உதவுகின்றது.
காதல் உறவு எனது ஏனைய தரப்புகளுடனான உறவுகளை நலிவடைய செய்து விடுமா?
காதல் உறவின் போது மற்றவர்களுடனான உறவு நிலையிலும் அவர்களுடனான நேரத்தினை செலவிடுவதிலும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும். அவர்கள் உங்களிடமிருந்து விலகிப் போவதாகவும் தோன்றக் கூடும். காதல் உறவின் ஆரம்பத்தில் இந்நிலை தோன்றலாம். ஆனால் காலப்போக்கில் மற்றைய உறவுகளையும் உங்கள் வாழ்;க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உணரத் தலைப்படுவீர்கள்.
எவ்வாறு நீங்கள் காதல் உறவினை முறித்துக் கொள்ள முடியும்? அதன் விளைவுகள் யாவை?
நேர்மையானதும் நேரடி தீர்மானத்தினூடாகவும் நீங்கள் உங்கள் காதல் உறவினை முடித்துக் கொள்ள முடியும். நீங்கள் கூற விரும்புவதனை நேரடியாகவும் தெளிவாகவும் கூறி விடுங்கள். இதனால் இரு தரப்புக்கும் துக்கமும், தனிமையும் அதன் சார்ந்த சோகமான உணர்வுகளும் ஏற்படக்கூடும். எவ்வாறாயினும் இவை அனைத்தும் காலப்போக்கில் கடந்து சென்று விடும்.
எனது காதலை ஒருவர் நிராகரித்தால் அதனை எவ்வாறு நான் எதிர்கொள்வது? (ஒரு பையனாக அல்லது ஒரு பெண் சமப்பாலுறவாளராக)
நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அத்துடன் தொடர்ந்து அவரைப் பின் தொடராதீர்கள். மிகவும் மன வேதனை தரும் விடயமாக இது இருப்பினும் அவசரப்படுவதனைத் தவிருங்கள். அத்துடன் இந்த உலகம் மனிதர்களினால் நிரம்பியுள்ளது. அதனால் நீங்கள் எப்பொழுதும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்.
சமப் பாலினத்தவர் மீது காதல் கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
இது முற்றிலும் சாதாரண விடயமாகும். எவ்வாறாயினும் இது பற்றி நீங்கள் மிகவும் நம்பிக்கையான ஒருவரிடம் மட்டும் கூறுங்கள்.
காதல் உறவினை ஆரம்பித்த பின்பு பாலியல் முனைப்பினை (ளநஒரயட ழசநைவெயவழைn) மாற்றிக் கொள்ள முடியுமா?
காதல் உறவில் இருக்கும் போது உங்கள் பாலியல் முனைப்பினை மாற்றிக் கொள்ள முடியும். எவ்வாறாயினும் நீங்கள் இது தொடர்பில் உள வள ஆலோசகரை கலந்தாலோசியுங்கள். அல்லது உங்களுக்கு உதவக் கூடிய இதர நம்பிக்கைக்குரியவரை நாடுங்கள்.
இலங்கையில் உடலுறவு கொள்ள சட்டப்பூர்வ வயது என்ன?
ஒருவர் 16 வயதைப் பூர்த்தி செய்யும் போது உடலுறவு கொள்ள ஒப்புதல் உள்ள வயதாக இலங்கை சட்டம் குறிப்பிடுகின்றது. ஆனால் 16 வயதுக்கு கீழ்ப்பட்டவருடன் உடலுறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும்.
விவாகத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது தவறான விடயமா?
உடலுறவு என்பது மனிதனின் அடிப்படை தேவையாகும். அது பாதுகாப்பானதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட செயலாக இருப்பதும் அனைவரினதும் உரிமையாகும். யாருடன் எப்பொழுது உடலுறவு கொள்ள வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தினைப் பொறுத்தது. அது தவறல்ல. தேவையற்ற கர்ப்பத்தினைத் தவிர்க்கவும், பாலியல் தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறவும் ஆணுரை, மாத்திரைகள் அல்லது பிற கருத்தடை முறைகளைப் பின்பற்றுவது அவசியமான விடயமாகும்.
எனது துணைஃ காதலர் என்னுடன் உடலுறவு கொள்ள விரும்புகின்றார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்த பிரச்சினையை நான் எவ்வாறு கையாள வேண்டும்?
உடலுறவு என்பது ஒப்புதல் பெறப்பட வேண்டிய விடயமாகும். இரு தரப்பும் ஒப்புதலுடன் பங்குபற்ற வேண்டிய விடயமாகும். நீங்கள் உடலுறவுக்கு தயாரில்லை என்று கருதினீர்களாயின் அதற்கு தெளிவாக மறுப்புத் தெரிவிப்பது முற்றிலும் சரியானதே.
எனது காதலி விவாகத்திற்கு முன்பு கர்ப்பம் அடைந்தால் என்ன செய்வது?
இந்த விடயத்தில் இருவரும் பொறுப்பினை ஏற்று அடுத்து என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டும். இவ்விடயம் பற்றி கலந்தாராயும் போது உங்கள் இருவரினதும் வயது, நிதி நிலைமை மற்றும் குழந்தையை வளர்ப்பதில் உள்ள விருப்பம் ஆகிய சில விடயங்களைக் கருத்திற் கொள்ளுங்கள்.
ஏன் சிலர் மதுபானம் அருந்துகின்றனர்?
பல காரணங்களுக்காக சிலர் மதுபானம் அருந்தும் பழக்கத்தினைக் கடைப்பிடிக்கின்றனர். ஓய்வுக்காகவும், சமூக அந்தஸ்திற்காகவும் மற்றும் தனிமையைப் போக்கவும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் மது அருந்துகின்றனர். மதுபானம் மூளையைத் தூண்டாது. மாறாக அது மனச்சோர்வினைத் தரும். அத்துடன் கட்டுப்பாட்டினைத் தளர்த்தி செய்ய முடியாத விடயங்களை செய்ய தூண்டும். மேலும் ஒருவரின் தீர்;மானத்தினை நிர்ப்பந்திக்கும். சமூகத்திற்காக மது அருந்துதல் என்ற விடயம் அளவு மீறாத வரை பிரச்சினைக்குரியதல்ல.
குத்துதல் (ளிமைiபெ) என்றால் என்ன?
தனியார் ஒன்றுகூடல்களில் (pயசவல) நடைபெறுகின்ற ஓர் ஆபத்தான நடைமுறையாக இதனைக் கூறலாம். மது அருந்தும் கோப்பையில் போதை தூண்டும் போதை மருந்துகளை இடுதல் என்று இதனைக் கூறலாம். இவ்வாறான பானங்கள் உங்கள் மனதை குழப்பச் செய்து, உங்கள் நடத்தையை வினோதமாக்கி ஆபத்தானதாக மாற்றும். அத்துடன் அதிகரித்த அளவு மரணத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக இளவயதில் குடிக்க ஆரம்பித்து அடர்த்தியாக குடிக்க தொடங்கினால் விரைவில் உங்கள் ஆரோக்கியம் சீர்கெடும்.
புகைப்பிடித்தல் நல்ல விடயமா?
புகைப்பிடித்தல் உயிரைக் கொல்லும். பெரும்பாலான கட்டிளமைப் பருவத்தினருக்கு அவர்களின் நண்பர்களே முதல் சிகரெட்டை வழங்குகின்றனர். புகைப்பிடிப்பவர்களின் பிள்ளைகள் அந்த பழக்கத்திற்கு அடிமையாகுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். சிகரெட்டில் நிக்கட்டின், விஷம் உள்ளடங்கிய வாயு மற்றும் தார் அடங்கியுள்ளதனால் அது ஆபத்தானது.
நிக்கட்டின் இரசாயனம் புகைப்பிடிப்புக்கு அடிமையாக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை தார் ஏற்படுத்துகின்றது. பக்கவாதம், மாரடைப்பு, ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் பலவிதமான புற்றுநோய்களை புகைப்பிடித்தல் அதிகரிக்கின்றது. புகைப்பிடிக்கும் பழக்கம் உங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளைக் குறைக்கின்றது. அத்துடன் நுரையிரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. அத்துடன் வாய்ப்புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், விரைப்புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதயக் கோளாறுகளுக்கும் இந்த பழக்கம் பிரதான காரணமாக அமைகின்றது.
போதை மருந்துகள் நல்லதா?
பெரும்பாலான இளம் வயதினருக்கு அவர்களின் நண்பர்கள் போதை மருந்துகளை அறிமுகம் செய்து வைக்கின்றனர். பரீட்சார்த்த முயற்சிகள் இறுதியில் பழக்கமாகி முற்றிலும் அடிமைப்படுத்தி விடுகின்றன. இலங்கையில் பொதுவாகக் கிடைக்கின்ற போதை மருந்துகளாக கஞ்சா மற்றும் ஹெரோயின் காணப்படுகின்றன. போதைமருந்து பாவனை தண்டனைக்குரிய குற்றமாகும். நீங்கள் அறிவார்ந்த கட்டிளமைப்பருவத்தினராக செயற்பட்டு இந்த பழக்கங்களை அடியோடு தவிர்த்து விடுங்கள்.
போதைமருந்துகளை ஊசி மூலம் ஏற்றிக் கொள்வதன் பாதிப்புகள் எவை?
ஊசி மூலம் போதை மருந்துகளை ஏற்றிக் கொள்வதனால் துரிதமாக அது மூளையை சென்றடைந்து விளைவுகளைப் பெற முடிகின்றது. அதிகளவு போதையை ஊசி மூலம் எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியப் பாதிப்புகளும், தொற்றுக்களும் ஏற்படுகின்றன. போதைமருந்துகளை தொடர்ச்சியாக பாவிப்போர்கள் பயன்படுத்தும் ஊசிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதனால் HIV மற்றும் hepatitis D & C யனெ ஊ ஏற்பட வாய்ப்புள்ளது.
போதை மருந்துகள் எவ்வாறு ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன?
போதை மருந்துகள் உடல் உள ஆரோக்கியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. அவை மூளையின் இரசாயணக் கட்டமைப்பினை மாற்றி விடுகின்றன. இந்த மாற்றங்கள் உணர்வுகளைப் பாதித்து நடத்தையையும் பாதிக்கின்றன. இதனால் தான் போதைமருந்துகளை உட்கொள்வோர் மனச்சோர்வு, மனக்குழப்பம் மற்றம் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னவாகும்?
போதைமருந்துகளை ஊசி மூலம் ஏற்றிக்கொள்வோர் தவறுதலாக அளவுக்கு அதிகமாக போதை மருந்தினை ஏற்றிக் கொள்வது பொதுவாகவே நடைபெறும் விடயமாகும். ஆனால் இது ஆபத்தான செயற்பாடாகும்.
போதைப் பொருட்கள் பாவனையை எப்படி நிறுத்துவது?
போதைமருந்து பாவனையை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும். ஏனெனில் அனைத்து விதமான போதைப் பழக்கங்களையும் நிறுத்தி விடுவதானது மீளப் பெறும் அறிகுறிகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டங்கள் மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதுடன் அதில் உளவியல் ரீதியிலான அனுசரணைகளும் வழங்கப்படும். ஆனால் புனர்வாழ்வு என்பது நீண்ட காலம் எடுக்கக் கூடிய செயற்பாடாகும்.