பாலுறவு பற்றிய கற்பனைகள் பொதுவானதாகும். அதற்காக வெட்கமடைய தேவையில்லை. ஒரு விடயம் தொடர்பாக கற்பனை செய்தால் அந்த விடயத்தினை செய்ய வேண்டும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. கற்பனையின் அடிப்படையில் ஒருவர் செயற்படுவார் என்றும் கருத முடியாது.
பாலியல் ரீதியிலான உறவில் இருவரும் இன்பம் அடைதல் அவசியமா?
பாலியல் உறவில் இரு தரப்பும் இன்பம் அடைதலும், இன்பம் வழங்குதலும் குறித்து கவனம் செலுத்த வேண்டும். பாலியல் உறவானது பக்குவமடைந்ததாகவும் அர்த்தமுள்ளதாகவும் முற்று முழுதான விருப்புடன் மேற்கொள்ளப்படுவது ஒருபோதும் பாதிப்பினை ஏற்படுத்தாது.
பாலியல் ரீதியிலான உறவில் இருவரும் இன்பம் அடைதல் அவசியமா?
பாலியல் உறவில் இரு தரப்பும் இன்பம் அடைதலும், இன்பம் வழங்குதலும் குறித்து கவனம் செலுத்த வேண்டும். பாலியல் உறவானது பக்குவமடைந்ததாகவும் அர்த்தமுள்ளதாகவும் முற்று முழுதான விருப்புடன் மேற்கொள்ளப்படுவது ஒருபோதும் பாதிப்பினை ஏற்படுத்தாது.
உடலுறவுக்கான ஒப்புதல் (உழளெநவெ) என்றால் என்ன?
சம்பந்தப்பட்ட இருவரும் சுய விருப்புடன் உடலுறவு கொள்வதனையே உடலுறவுக்கான ஒப்புதல் எனலாம். ஒப்புதல் அற்ற உடலுறவு பாலியல் வல்லுறவாகவே கருதப்படும்.
பாலியல் விருப்பு அல்லது காமம் (sexual desire) என்றால் என்ன?
பாலியல் வெளிப்பாடு அல்லது பாலியல் கவர்ச்சிக்கான ஏக்க நிலையே இவ்வாறு அழைக்கப்படுகின்றது. நெருக்கமான உறவில் ஒரு நபர் காம உணர்வினைக் கொண்டிருப்பார். கிட்டத்தட்ட அனைவருமே பாலியல் விருப்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். சமப் பாலினத்தினருடனான பாலியல் விருப்பு (Homosexual Orientation) கொண்டவர்களும், எதிர்ப்பாலினருடன் பாலியல் விருப்பு (Hetro sexual orienyayion) கொண்டவர்களும், இரு பாலினர் மீது பாலியல் ரீதியிலான விருப்பினைக் (bisexual orientation) கொண்டவர்களும் சமூகத்தில் உள்ளனர்.
பாலியல் விருப்பு அல்லது காமம் என்பதும் காதல் என்பதும் ஒன்றா?
காமம் காதல் அல்ல. காதல் என்று அது தவறாகக் கருதப்படுகின்றது. காதலுடனும் காதல் இன்றியும் ஒருவர் காமம் அதாவது பாலியல் விருப்பினைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக: ஒருவர் அரிதாக அறிந்து வைத்திருக்கும் ஒரு பெண்ணுடன் அல்லது ஆணுடன் காம ஆசைiயைக் கொண்டிருக்க முடியும்.
காமம் என்பது உடலியல் பாலியல் விளைவைப் பொறுத்தது அல்ல. உதாரணமாக: ஒரு ஆணோ சிறுவனோ உணர்ச்சி விருப்பின்றி விறைப்பு நிலையை அடையலாம். அல்லது விறைப்பின்றி விருப்பினைக் கொண்டிருக்க முடியும்.
காமம் என்பது பாலியல் செயற்பாடு அல்ல. ஒரு நபர் காம உணர்வினை அடைந்தாலும் அதனை செயற்படுத்துவதா இல்லையா என்ற முடிவினை எடுக்க வேண்டியுள்ளது.
பாலியல் ரீதியில் தூண்டப்பட்டால் உடலில் எவ்வாறான மாற்றங்கள் நிகழும்?
ஆண்கள் ஆண் குறியில் விறைப்பினைப் பெறுவர். பெண்கள் யோனிப்பாதையில் ஈரலிப்பு தன்மையை உணர்வர். பரஸ்பர தழுவல்களும் தொடுகைகளும் வலிதான பாலியல் தூண்டல்களை மேற்கொள்வதனுடன் திட்டமிடப்படாத திடீர் உடலுறவுக்கும் வழிவகுத்து விடும்.
பாலியல் ரீதியில் தூண்டப்படும் போது உடலின் எப்பாகங்கள் உணர்வுப் பெறுகின்றன?
முகத்தினை தடவுதல், வயிறு, முலைக்காம்பு, காதுகள், கால்கள் அல்லது மற்றைய பாகங்களை ஸ்பரிசிக்கும் போது அல்லது தொடும் போது பாலியல் ரீதியிலான உணர்வு பெறப்படுகின்றது. ஆனால் தூண்டலுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துலங்கல்களையே வெளிப்படுத்துவர். மேலும் ஒப்புதல் மற்றும் சூழல் காரணமாகவும் மாறுப்பட்ட துலங்கல்களை ஒருவர் வெளிப்படுத்தக் கூடும்.
பெண்களில் எந்த உடல் பாகம் பாலியல் இன்பத்திற்கு உதவுகின்றது?
பெண்களில் அவர்களின் பெண்குறிமூலம், பெண்குறி, யோனிப்பாதை மற்றும் மார்பகங்கள். பெண்குறிமூலம் (உடவைழசளை - யோனிப்பாதை அல்ல) பெண்களின் உடலில் மிகவும் உணர்வுபூர்வமான பகுதியாகும். இப்பாகம் தூண்டப்படும் போது பெரும்பாலான பெண்கள் பாலியல் திருப்தியை உணர்கின்றனர். (ஆண்குறி யோனிப்பாதைக்குள் செல்வதனை விட). மேலும், பாலுறுப்பு அல்லாத உடற்பாகங்களான உதடு, கழுத்து, வயிறு மற்றும் தொடைகள் ஸ்பரிசத்தின் போதும் பெண்கள் பாலியல் இன்பம் பெறுகின்றனர்.
ஆண்கள் உடலில் எந்த பாகம் பாலியல் இன்பத்திற்கு பங்களிப்பு செலுத்துகின்றது?
ஆண்களில் ஆண்குறி, விதைகள், விதைப்பை, சுக்கிலம்
பாலியல் தூண்டல்களின் போது உடல் எவ்வாறு பிரதி விளைவுகளைக் காட்டுகின்றது?
இதன் போது உடலில் பலதரப்பட்ட தொழிற்பாடுகள் நிகழ்கின்றன. உதாரணமாக: இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். சுவாசப்பை விரிவடைகின்றது. பாலுறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. அத்துடன் அதிகமான இரத்த ஓட்டம் காரணமாக ஆண்குறியில் விறைப்புத்தன்மை ஏற்படுகின்றது. உடலில் சுரப்புகள் சுரக்கின்றன. பெண்களில் யோனிப்பாதை ஈரலிப்பாகும். எனினும் சூழ்நிலையைப் பொறுத்து பாலியல் தூண்டுதலின் போது உடலின் பிரதிவிளைவுகள் வேறுபடுகின்றன.
பாலியல் உச்சநிலை என்றால் என்ன?
பாலியல் தூண்டல் அல்லது எழுச்சியானது உச்சநிலையை அடைவதையே பாலியல் உச்சநிலை என்று கூறுகிறோம். தீவிர திருப்தி உணர்வுடன் உச்சநிலை ஏற்படும் போது சுரப்புகள் சுரக்கின்றன. (விந்தணு வெளியேற்றம்- ஆண்களில்ஃ பாலுறுப்பு சுரத்தல் - பெண்களில்). சில வேளைகளில் உடலுறவு இன்றியும் உச்சநிலை ஏற்படும். அதேவேளை உச்சநிலை அற்ற உடலுறவும் உள்ளது. பெரும்பாலான பெண்கள் பெண்குறிமூலம் தூண்டப்படுதலினூடாக உச்சநிலையை அடைந்துவிடுகின்றனர்.
பாலியல் உச்சநிலை என்றால் என்ன?
பாலியல் தூண்டல் அல்லது எழுச்சியானது உச்சநிலையை அடைவதையே பாலியல் உச்சநிலை என்று கூறுகிறோம். தீவிர திருப்தி உணர்வுடன் உச்சநிலை ஏற்படும் போது சுரப்புகள் சுரக்கின்றன. (விந்தணு வெளியேற்றம்- ஆண்களில்ஃ பாலுறுப்பு சுரத்தல் - பெண்களில்). சில வேளைகளில் உடலுறவு இன்றியும் உச்சநிலை ஏற்படும். அதேவேளை உச்சநிலை அற்ற உடலுறவும் உள்ளது. பெரும்பாலான பெண்கள் பெண்குறிமூலம் தூண்டப்படுதலினூடாக உச்சநிலையை அடைந்துவிடுகின்றனர்.
சுய இன்பம் காணல் என்றால் என்ன?
சுய தூண்டலினூடாக பாலியல் இன்பம் காணல் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவாக உள்ள ஓர் பாலியல் நடவடிக்கையாகும்.
பெண்கள் தனது பெண்குறிமூலத்தினை, யோனிப்பாதையை அல்லது வேறு உடல் பாகங்களைத் தூண்டுவதனூடாக சுய இன்பம் பெறுகின்றனர். (உதா: மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகள்). ஆண்கள் தமது ஆண்குறியைத் தூண்டுவதனூடாக சுய இன்பம் பெறுகின்றனர்.
ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலாரும் சுய இன்பம் பெறுவார்களா?
கட்டிளமைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோர்கள் இரு பாலாரும் சுய இன்பம் பெறுகின்றனர். பெரும்பாலும் பெண்களும் இளம் பெண்களும் அதனை வெளிப்படையாக கூற தயக்கம் காட்டுகின்றனர்.
சுய இன்பம் பெறுவதில் நான் அடிமையாகி விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் சுய இன்பத்திற்கு அடிமையாகி விட்டீர்கள் என்று உணர்ந்தீர்களாயின் அது உங்கள் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும். இவ்விடயம் தொடர்பில் உளவள ஆலோசகரின் மற்றும் உளவியலாளரின் உதவியைப் பெறுங்கள்.
ஆண்குறியின் அளவு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமா?
நபருக்கு நபர் ஆண்குறியின் அளவு மாறுபடும். ஆனால் இந்த வேறுபாடானது விறைப்புத் தன்மையின் போது மறைந்து விடுகின்றது. கொடுத்து பெறும் பாலியல் இன்பமானது விறைப்பு பெற்ற ஆண்குறியின் அளவில் தங்கியிருப்பதில்லை. ஆனால் துணையின் ஒப்புதலிலும் அவர்களின் விருப்பத்தினை உணர்வதிலுமே தங்கியுள்ளது. ஆதலால் ஆண்குறியின் அளவு குறித்து கவலைப்பட தேவையில்லை.
ஆண்குறியின் முன்தோலை அகற்றும் செயற்பாடு (circumcision) உடலுறவின் போது இருவரினதும் பாலியல் இன்பத்தினை அதிகரிக்க செய்யுமா?
ஆண்குறியின் முன்தோலை அகற்றுதலானது ஆரோக்கிய காரணங்களினால் முன்னெடுக்கப்படுவதுடன் அதில் கலாசார விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. பால்வினை நோய் தொற்றுக்களை குறைப்பதற்கு இந்நடைமுறை உதவுகின்ற போதிலும் இரு தரப்பினரினதும் பாலியல் திருப்திக்கு உதவுகின்றது என்ற விடயம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
மார்பகங்களின் அளவு பற்றிய பிரச்சினை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமா?
பெண்களுக்கு பெண்கள் மார்பகங்களின் அளவுகள் வேறுப்படுகின்றன. பருவமடையும் காலங்களில் உடலில் கொழுப்பு படிவதனால் மார்பகங்கள் அதிகரித்து காணப்படும். கர்ப்பிணி காலப்பகுதியில் மார்பகங்கள் முழுமையான வளர்ச்சியுற்றிருக்கும். பாலியல் தூண்டல் செயற்பாட்டிற்கும் பாலூட்டுவதற்கும் மார்பகங்களின் அளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.
உடலுறவின் போது ஏன் எனது முலைக்காம்புகள் விறைப்படைகின்றன?
உடலுறவின் போது மார்பகங்கள் பெரிதாகுவதும் முலைக்காம்புகள் விறைப்படைவதும் பாலியல் தூண்டுதல் காரணமாகவே நடைபெறுகின்றன. இது சாதாரண விடயமாகும்.
பாலியல் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் பாலியல் இன்பத்தினை அதிகரிக்குமா?
பாலியல் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தும் போது அவை பாலியல் இன்பத்தினை அதிகரிக்கின்றன. அத்துடன் துணையின் ஒப்புதலையும் பெறுவது நன்று. எவ்வாறாயினும் பாலியல் விளையாட்டுப் பொருட்களை பகிர்ந்து பயன்படுத்தக் கூடாது. பகிர்ந்துகொள்ளப்படும் பாலியல் விளையாட்டுப் பொருட்கள் ளுவுஐ தொற்றுக்கு வழிவகுக்கும்.
வயகரா என்ன செய்யும்?
விறைப்புத்தன்மை குறைபாடுள்ள (நசநஉவடைந னலளகரnஉவழைn -நுனு) ஆண்கள் வயகராவைப் பயன்படுத்தும் போது ஆண்குறியில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்து உடலுறவு கொள்வதற்கான விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால் ஒவ்வொருவருக்குமான பெறுபேறுகள் வேறுப்படக் கூடும். நுனு தொடர்பான குறைகள் உள்ளவர்களுக்கு இது பயன்மிக்கதாக உள்ளது. பொதுவாக 30 முதல் 60 நிமிடங்களில் வயகரா தொழிற்பட ஆரம்பிக்கும். சரியான அளவு உட்கொள்ளப்படல் வேண்டும். தவறான பயன்பாடு ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
விந்து வெளியேற்றுவதனை தாமதப்படுத்தும் மாத்திரைகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையுமா? குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் விடயமாக அமையுமா?
விந்து வெளியேற்றத்தினை தாமதப்படுத்தும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைகளுக்கு இணங்க சரியான அளவில் உட்கொள்ளப்படும் போது பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட மாட்டாது. எவ்வாறாயினும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. விந்து வெளியேற்றத்தினை தாமதப்படுத்தும் மருந்துகளை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் பெற்றுக்கொள்வதனூடாக பக்கவிளைவுகளைத் தடுக்க முடியும்.
பால் மாற்றம் செய்து கொண்டவர்கள் எவ்வாறு உடலுறவு கொள்வார்கள்?
அவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுப்பட்டவர்கள் அல்லர். தனக்கு பிடித்தவர்களுடன் அவர்கள் தமது பாலியல் விருப்புகளை நிறைவேற்றிக் கொள்வர்.
குதவழி பாலுறவு என்றால் என்ன?
குதவழியில் மேற்கொள்ளப்படும் பாலுறவு குதவழி பாலுறவு என்று அழைக்கப்படுகின்றது. விரல்கள், ஆண்குறி அல்லது பாலியல் விளையாட்டுப் பொருட்கள் குதவழியில் செலுத்தப்பட்டு பாலியல் திருப்தி பெற்றப்படுகின்றது. குதவழி பாலுறவு தொடர்பில் பலர் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். குதவழி பாலுறவு கொள்பவராயின் பாதுகாப்பாக அதனை மேற்கொள்ள முயலுங்கள். ஆணுறைகளையும், வழுக்கும் திரவங்களையும் பயன்படுத்துங்கள்.
ஆபாசப்படங்கள் நல்லவையா?
ஆபாசப்படத் தொழிற்துறை உலகளாவிய தொழிற்துறையாகும். பணத்திற்காக பாலுறவு இங்கு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. ஆபாசத் திரைப்படங்களும், வீடியோக்களும் கமெரா நுணுக்களின் மூலம் பாலியல் நடத்தைகளைப் படமாக்கி பார்வையாளர்களின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. செயற்கையான ஆபாசப் படங்கள் பாலியல் தொடர்பான தவறான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதுடன் வன்முறை மிக்க பாலியல் செயற்பாடுகளையும் நடத்தைகளையும் உருவாக்குகின்றன. ஆபாசப்படங்களையும் வீடியோக்களையும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆபாசப்படங்களுக்கு அடிமையாக முடியுமா?
ஆபாசத் திரைப்படங்களுக்கு அடிமையாதல் ஆபத்தானது. ஏனெனில் அது உணர்வுகளைப் பாதிப்பதுடன், உடல் உள பாதிப்பினையும் ஏற்படுத்தி துணையுடனான உறவினையும் பாதிக்கும். மிக இளம் வயதிலேயே பாலுறவு கொள்ள தூண்டுவதுடன் இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புடன் ளுவுஐ ஏற்படவும் காரணமாக அமைகின்றது. இளம் வயதினர் இணைய நேரலை ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் இணைய நேரலை உரையாடல்களில் ஈடுபடுவதும் இணைய நேரலை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தினையும் அதிகரிக்கி;ன்றது.