வலைப்பதிவு

அரசியலில் பெண்கள்: அவர்கள் ஏன் காணப்பஉவதில்லை மற்றும் ஏன் இருக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் அபீவிருத்தி திட்டத்தின் (UNDP) கருத்துப்படி பாலினம், சமூக அந்தஸ்து மற்றும் இனம் ஆகியவற்றின் புறக்கணிக்கப்பால் பாதிக்கப்படும் அனைத்து மக்களும் அரசாங்க்த்தின் செல்வாக்கு செலுத்தும் தீர்மானங்களில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்க முடியும். மேலும், ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையான வேறுபாடுகளை மதித்து சமூகத்தின் விவகாரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான நேர்மையும் சமத்துவமும் பேணப்படும் போதே அது ஜனநாயகமாக குறிப்பிடப்படுகின்றது.

தொடர்ந்து படி

இளம்பருவத்தினரிடையே பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் தொடர்பான அறிவும் அதன் முக்கியத்துவமும்.

கட்டிளமைப் பருவம் என்பது ஒரு நபர் பலவிதமான சமூக, உடல் மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு காலகட்டமாக இருப்பதோடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு குழந்தையாக இருந்து வயது வந்தவராக மாறும் காலமாகும். இளம் பருவத்தினரிடையே மிகவும் பொதுவான பிரச்சினைகள் வளர்ச்சி, அபிவிருத்தி, மன ஆரோக்கியம் மற்றும் ஆபத்தான அல்லது சட்டவிரோதமான நடத்தைகள், இள வயது கர்ப்பம், தொற்று நோய்கள் மற்றும் போதை வஸ்து கோளாறுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

தொடர்ந்து படி

பாலினம் மன ஆரோக்கியத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது?

மனநோய்களுக்கு வரும்போது, வெவ்வேறுபட்ட பாலினங்கள் மூலம் பெறப்படும் விளைவுகள் வெவ்வேறுபட்டதாக காணப்படும். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் மனநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்க உளவியல் சங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி பெண்கள் பொதுவாக கவலை அல்லது மனச்சோர்வினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதோடு ஆண்கள் போதைப் பொருள், துஷ்பிரயோகம் அல்லது சமூக விரோதக் கோளாறுகளால் பாதிக்கப்படக்கூடியவர்களாக காணப்படுகின்றனர். கவலையுடனர உள்ள பெண்கள் உணர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது பொதுவாக மீண்டும் தனிமை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துவதற்கு சாதகமாக அமைகின்றது. மறுபுறம் ஆண்களை நோக்குவோமானால், அவர்களின் உணர்ச்சிகளை இலகுவாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இதிகமாக காணப்படுவதால் இது கட்டுப்படுத்தல், மனக்கிளர்ச்சி, வற்புறுத்தல் மற்றும் இணக்கமற்ற நடத்தைகளுக்கு வழிவகுக்கிறது.

தொடர்ந்து படி
Share on facebook
Share on twitter
Share on whatsapp